Monday, 31 October 2016

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய..

Step:1 

www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும். தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password  ஐடைப் செய்து Loginசெய்யவும்.

Step:2


Bill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள Edit Installment என்பதைகிளிக் செய்யவும்.

Step:3

Do you want to edit installment Oct-2016 to Nov-2016? Yes No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும். Edit Installment successfullyஆன பிறகு Logout செய்யவும்.

Step:4

பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும் Password ஐடைப் செய்துLogin செய்யவும்.

Step:5

Bill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.


Step:6 

Pay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து

Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்தபின் OK கொடுக்கவும்.

Step:7 

Pay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல் Bill Selectசெய்து  Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்Pay Statement ஐ download செய்துகொள்ளவும்.

Step:8 

Schedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல் Bill Selectசெய்யவும் பிறகு View Option-ல் All Schedule-ஐClick செய்து பின்னர் View Report என்பதை கிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.


Step:9 

ECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல் Bill Selectசெய்யவும். பிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்.  ECS Report ஐ download செய்துகொள்ளவும்.

Step:10

Download செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய Bill உடன் சரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்

செய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த Bill-ல்உள்ளனர் என்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out செய்யவும்.

Step:11 

பின்னர் தோன்றும்திரையில் D login-க்கான User Name மற்றும் Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Bill Approval என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து Bill Approval கொடுக்கவும். Bill Approved Successfully எனவந்த பின் Log Out செய்யவும்.

Step:12

பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்  Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை  கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill Type-ல் Bill Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக்  செய்யவும். Bill Generate ஆனபிறகு Download SES File என்பதைகிளிக் செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும். பின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான் Bill Ready.


குறிப்பு:

Form 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து கொள்ள வேண்டும்.

Saturday, 22 October 2016

தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையங்களில் எந்த வகை சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் அதன் கட்டண தொகை எவ்வளவு?






Thursday, 13 October 2016

கருவறையில் குழந்தையின் பயணம் - ஓர் பார்வை 
          

       வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கருவறையில் ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுத்துள்ளது. 

     உலகிலேயே தாய்-குழந்தை உறவு தான் மிகவும் புனிதமானது. இது யாராலும் உடைக்க முடியாத பிணைப்புக்களைக் கொண்டது. 9 மாதம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை உலகைப் பார்க்கும் போது, தன் தாயின் அரவணைப்பை தான் எப்போதும் எதிர்பார்க்கும். தாயின் கைப்பட்டாலே அக்குழந்தை சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளும்.                  நீங்கள் புதிதாக திருமணமானவர்களாக இருந்து கருத்தரித்திருந்தால், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். 
         மாதம் #1 கர்ப்பமான முதல் 4 வாரத்தில் கருத்தரித்திருப்பது நன்கு தெரியும். இந்த மாதத்தில் கருமுட்டையானது இரண்டு செல்களாக இருக்கும்.
         மாதம் #2 * இரண்டாவது மாதத்தில் தான் அறிகுறிகள் தெரியும். அதுவும் இக்காலத்தில் மிகுந்த சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, காலைச் சோர்வு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள். * இரண்டாவது மாதத்தில் குழந்தையின் இதயம் துடிக்க ஆரம்பிக்கும் மற்றும் மூளை உருவாக ஆரம்பமாகும். 
         மாதம் #3 * மூன்றாவது மாதத்தில் கருமுட்டை உருபெற்ற கருவாக மாறும். * காலைச் சோர்வு குறையும். * இக்காலத்தில் உருப்பெற்ற கருவின் அளவு ப்ளம்ஸ் பழ அளவில் இருக்கும்.                    மாதம் #4 * இரண்டாவது மூன்று மாத காலம் ஆரம்பமாகிறது. * இக்காலத்தில் குழந்தையின் எலும்புகள் கடினமாகியிருக்கும். இதனால் எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் அசைவைக் காணலாம். * இந்த மாதத்தில் குழந்தை 5 இன்ச் நீளம் மற்றும் 5 அவுன்ஸ் எடையுடன் இருக்கும்.                 மாதம் #5 * இந்த மாதத்தில் குழந்தையின் அசைவை உணரக்கூடும். * குழந்தைக்கு பேசுவது கேட்க ஆரம்பிக்கும். * ஐந்தாவது மாதத்தில் முதுகு வலி, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், தலைவலி, நீர்கோர்வை, தலைச்சுற்றல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும்.  
         மாதம் # 6 கர்ப்ப காலத்தின் பாதியை கடந்துவிட்டீர்கள். இந்த மாதத்தின் இறுதியில் குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். 
          மாதம் #7 * கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் குழந்தை உதைக்க ஆரம்பிக்கும். * குழந்தையின் மூளை செயல்பட ஆரம்பித்து, நாம் குழந்தையிடம் பேசினால் அதற்கு குழந்தை தன் அசைவின் மூலம் பதில் அளிக்க ஆரம்பிக்கும். * இந்த மாதத்தில் குழந்தை 13 இன்ச் நீளத்தில் இருக்கும்.  
         மாதம் #8 * எட்டாவது மாதத்தில் குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் மற்றும் குழந்தையின் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். * இந்த மாதத்தில் குழந்தையின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கும்.   
         மாதம் #9 ஒன்பதாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு அதிகமாக உதைக்கும், அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படும் மற்றும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். 

Tuesday, 11 October 2016

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.


2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.


3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

SC/ST - அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான செயல்முறை கடிதம்




Saturday, 1 October 2016

அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் -முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை பெறலாம்