Monday, 28 March 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வுஎப்போது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!மிக அருகில் வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு.'நடப்பு நிதியாண்டிலேயே (2016-17) ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.


இது மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு. மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஊதியக் குழு உயர்வு எப்போது?ஏன் ஊதியக் குழு?ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!'ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊழியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா?' என்றொரு கேள்வி எழக்கூடும்! அதற்கான பதில்:மாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு!இவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு!காலம் என்ன செய்கிறது?50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா? 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா? 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள்? 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம்? -இதுதான் காலமாற்றம்! இதற்காகத்தான் ஊதியக்குழு!ஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம்! நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே!ப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.கால அலகு (Periodicity)தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.ஊதியக்குழு அமலாக்க தேதிமுதலாவது ஊதியக்குழு - 01.06.1960 முதல்இரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்மூன்றாவது ஊதியக்குழு - 01.04.1978 முதல்நான்காவது ஊதியக்குழு - 01.10.1984 முதல்ஐந்தாவது ஊதியக்குழு - 01.06.1988 முதல்ஆறாவது ஊதியக்குழு - 01.01.2006 முதல்ஏழாவது ஊதியக்குழு - 01.01.2016 முதல்எதிர்பார்ப்பதுமேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல்முன்னும், பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊதியர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.குறைந்த பட்சம்: அதிக பட்சம்01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -
*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் அகவிலைப்படி) = 50 10 = 60*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-முதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -
* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் தர ஊதியம் அகவிலைப்படி 119%) = 4800 1300 7259 = 13,359
* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000 10000 91630 = ரூ.168630/-அதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிதுஅதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.பணப்பலன் (Monetary Benefit)!ஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன்5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு!

01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.முந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண்ணிக்கை 29.01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் தனி ஊதியம் அகவிலை ஊதியம் அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24 12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.இவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம்.

அதற்கான கணக்கீடு பின் வருமாறு:
* ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-
* இவரது ஊதிய ஏற்றமுறை (Pre Revised Scale of Pay) ரூ.5000 - 150 - 8000
* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-
* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)எல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக்குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.ஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறைஇந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1 0=1பெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000 GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010 2392 = 4402ஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.இந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊதிய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.நிலுவை (Arrears)!ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.இந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதிபொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.

முதன்முறையாக...!

பொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.ஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மைபதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.அவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு!
எந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அவற்றுள் சில:
* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது
* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...

12th STANDARD MARCH 2016 BIOLOGY ANSWER KEY(ONE MARKS-ENGLISH MEDIUM)

Pay Fixation Regarding Clarification

01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!


1. உங்கள் வேண்டுதல் கடிதம் மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம் (Covering Letter)


2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.

3.பணி நியமன ஆணை.

4.பணிவரன்முறை ஆணை.

5.தகுதிகான்பருவம்   ஆணை.

6.  10வகுப்பு  மற்றும் 2 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மை தன்மை சான்று

7 . பட்டச் சான்றிதழ்UG (Convocation only), PG (Convocation only)& BEd (Convocation only) . மேற்கூறிய அனைத்துசான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றுகள். For (BT ASST) இதைபோல (PG ASST) மதிப்பெண் பட்டியல் இணைக்க தேவை இல்லை .

8. S. R Book  (Service Record) up to date entry.

9.  விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின்  நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.மற்றும்பார்வைக்கு அசல்  (original ) சான்றிதழ்கள் உடன் எடுத்து  செல்ல வேண்டும்.

prepare 4 set of copies ,
2 set. to CEO office.,
1 set for selfand
1 set for office Copy
All the Best to Teachers!!!

M.A. Economice Degreee Eligible to Incentive - RTI Letter

M.A. Economice Degreee Eligible to Incentive - RTI Letter



தற்காலிகப் பணிநீக்கக் (Suspension) காலத்தில் வழங்கப்படும் ஊதியம்.

தற்காலிகப் பணிநீக்கக் (Suspension) காலத்தில் வழங்கப்படும் ஊதியம்.




Monday, 21 March 2016

GO.237 ( Finance Dept) Dt.22.07.2013 Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional incrementof 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders - Issued.

Thursday, 17 March 2016

தற்காலிகப் பணிநீக்கம் - விளக்கம்

ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகள் (தமிழில்)

Wednesday, 16 March 2016

குழந்தைகளை தத்து எடுக்க புதிய விதிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய குழந்தைகளை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் தத்து எடுப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலை யில், இந்த சட்டத்தின் கீழ் விதி முறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


மேலும் தத்து எடுப்பது அல்லது கொடுப்பது தொடர்பான புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று மறுத்த நீதிபதிகள், ஏதேனும் குறிப்பிட்ட புகாருடன் மனுதாரர் வந்தால் அதை விசாரிப்பது குறித்து சிபிஐ பரிசீலிக்கலாம் என்றனர்.

குழந்தைகள் தத்து எடுக்கப்படுவதை சிறார் நீதிச் சட்டம் - 2002-ன் பிரிவு 2(ஏஏ) வரையறுக்கிறது. வழக்கமான பெற்றோர் குழந்தைகளுக்கு உரிய அனைத்து உரிமைகள் மற்றும் பொறுப்புகளை தத்து எடுக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் பிரிவு அளிக்கிறது.

தத்து எடுக்கும் பெற்றோர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தப் பிரிவு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது

G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Expert Committee to examine the demand for continuing Old Pension Scheme – Constituted – Orders – Issued.


Monday, 14 March 2016

இம்மாத சம்பளப் பட்டியல் எழுதும் போது கவனிக்க வேண்டியது........

14/03/2016

குடும்ப நலநிதி உயர்த்திய அரசணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016

எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90
மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்
ஏப்ரல் மாதம் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.
இம்மாத சம்பளப் பட்டியல் எழுதும் போது கவனிக்க வேண்டியது.......
குடும்ப நலநிதி உயர்த்திய அரசணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90
மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்
ஏப்ரல் மாதம் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.
இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும்  உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட  சத்துணவு  அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பொருந்தும்......
இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும்  உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட  சத்துணவு  அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பொருந்தும்

Friday, 11 March 2016

அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வலியுறுத்தல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும் என, மகளிர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.அரசு மருத்துவர்கள், பட்ட மேல்படிப்பு மருத்துவர்கள் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், உலக மகளிர் தின விழா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  இதில், மருத்துவமனையின் மகப்பேறு தலைமை மருத்துவர் நீலாம்பாள் தலைமை வகித்துப் பேசியது:


உலக மகளிர் தின விழா பெண்களின் நலம் காக்க உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டில், பணிபுரியும்இடத்தில், சமூகத்தில் பெண்களை மரியதையுடன், ஆண்களுக்கு சமமாக நடத்த வேண்டும். மேலும், கருவில் பெண் சிசுக்களைக் கருசிதைவு செய்வது, பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும் என்றார்.

செவிலியர் தலைமைக் கண்காணிப்பாளர் ஞானம்பாள் பேசியது:குடும்பத்தில் உள்ள அனைவரையும் பேணி காக்கும் பெண்கள் தங்களின் உடல் நலத்தைக் காக்க மறந்து விடுகிறார்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால், பல பெண்கள் ரத்தச் சோகையுடன் காணப்படுகின்றனர். பெண்கள் ஆரோக்கியமான உணவை உண்டால்தான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்றார்.

அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.ரங்கநாதன் பேசியது:தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக இருப்பதற்குக் காரணம் பெண் மகப்பேறு மருத்துவர்கள், பெண் செவிலியர்கள், பெண் மருத்துவமனை ஊழியர்கள் பங்கு மிக முக்கியமானது.இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றும் பெண் மருத்துவர்கள் பல நேரங்களில் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும்என்றார்.விழாவில், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பெண் ஊழியர்கள், பெண் நோயாளிகள் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

Thursday, 10 March 2016

'கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!'

கல்வித்துறை என்பது கையூட்டு துறை என மாறிவிட்டது. கையூட்டுக்கான ஏஜன்ட்களாக அதிகாரிகள் செயல்பட்டது ஊரறிந்த உண்மை. ஐந்து ஆண்டுகளில், கல்வித்துறையில், ஆறு அமைச்சர்கள் மாறிவிட்டனர். இதில், ஒரு அமைச்சர் கூட கல்வித்துறை குறித்து, '' னா, '' வன்னா கூட, படிக்க அனுமதிக்கப்படவில்லை. துறையை பற்றியே அமைச்சருக்கு தெரிய விடாமல், பார்த்து கொண்ட ஆட்சி தான், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி.

அதேபோல், ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறையின், ஏகாதிபத்திய அதிகாரியாக திகழ்ந்தவர் முதன்மை செயலர் சபிதா. இவர் அரசு அதிகாரி என்பதை விட, அரசு செலவில் இலவச திட்டங்களை வகுத்து கொடுத்து, இலவச பொருட்களில், ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி, மாணவர்கள், ஆசிரியர்களை, ஜெயலலிதாவின் பிரசாரகர்களாகவும், பள்ளிகளை பிரசார மையங்களாகவும் மாற்றிய பெருமை கொண்டவர்.மீண்டும், அ.தி.மு.க., ஆட்சியே தொடர்ந்தால், இவர் தான் நிரந்தர முதன்மை செயலராக இருப்பார். அவருக்கு கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கையூட்டு பெற்று தரும் ஏஜன்டாக செயல்பட்டனர் என்பதை வெளிப்படையாகவே சொல்வேன். பாடநுால் அச்சடிப்பு, இலவச கணித உபகரண பெட்டி, புத்தகப்பை என, 14 வகை இலவச பொருட்களையும் தயாரிக்க, தனியாருக்கு, 'ஆர்டர்' வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆர்டர் எடுத்தவர், 45 சதவீத கமிஷன் தர, இந்த அதிகாரிகள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.ஆசிரியர் நியமனம், பதவி உயர்வுகளில் ஒவ்வொரு, 'ரேட்' வைத்தது, ஆசிரியர்சமுதாயத்துக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தெரிந்த உண்மை.
கற்பிக்கும் ஆசிரியர் நியமனத்திலும், பணியிட மாற்றத்திலும் பணம்பார்த்தவர்களை எப்படி மன்னிப்பது? முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவர் சிறைக்கு சென்ற நாளில் மட்டும், 600 பேருக்கு கலந்தாய்வு என்ற பெயரில்,ஒவ்வொருவருக்கும், ஒரு, 'ரேட்' வைத்து, விரும்பிய இடத்துக்கு நியமனம் செய்தனர்.ஒன்றியம் விட்டு ஒன்றியம் என்றால், இரண்டு லட்சம்; மாவட்டம் விட்டு மாவட்டம் என்றால், மூன்று லட்சம்; திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் என்றால், ஆறு லட்சம் ரூபாய் என, இட மாற்றத்திற்கு விலை வைத்தனர்.கிருஷ்ணகிரி, நாமக்கல் என, அரசு பள்ளிகள் பின் தங்கிய மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான ஆசிரியர் இடங்கள் காலியாகஉள்ளன. ஆனால், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் உபரி ஆசிரியர்கள் இருந்தும், அங்கே கேட்போருக்கு பணம் வாங்கிகொண்டு, காலியிடத்தையே மாற்றி பணி நியமனம் செய்ததும் இந்த ஆட்சியின் சாதனையே.மாணவர்களின் படிப்புக்கான, 'சிலபஸ்' மாற்றத்துக்கு கூட கல்வியாளர்களை இந்த அரசு நெருங்கவில்லை. தமிழ் பாட ஆசிரியர் நியமனத்தில், தமிழ் பாடத்தை கடைசி பட்டியலில் வைத்து, மற்ற பாடங்களுக்கு முன்னுரிமை அளித்து, தமிழை புறந்தள்ளியது இந்த அரசு.ஆசிரியர்களுக்கு கல்வி பணியை தவிர மற்ற எல்லா பணிகளும் கொடுத்தனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு; மந்திரிகளை வைத்து ஒவ்வொரு இலவச பொருளுக்கும், ஒரு விழா என, 14 இலவசபொருட்களுக்கும் தனித்தனியே விழா எடுக்கும் பணி; அதிகாரிகளின் சொந்த விஷயங்களை கவனிக்கும் பணி; சைக்கிள்,'லேப்டாப்' எடுத்து வருதல்; இலவச புத்தக மூட்டை சுமப்பது; முதன்மை செயலரின் அறையில் காத்து கிடப்பது; மாவட்ட கல்வி அலுவலக பணிகள் என, ஆசிரியர் பணியில் அடங்காத அனைத்தையும் பார்ப்பதற்கே, ஆசிரியர்களை பயன்படுத்தினர்.ஆனால், கல்வித்தரம் இல்லையே என, நீலிக் கண்ணீர் வடிப்பதுஎன்ன நியாயம்?'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என, மத்திய அரசு திட்டம் கொண்டு வந்து நிதியும் ஒதுக்கியது. அந்த நிதியை எதற்கோ செலவு செய்து விட்டு, கழிவறை இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், கழிப்பறை இருப்பது போல் எழுதி வாங்கி விட்டனர். இந்த அவலத்தால், கிராமப்புற மாணவர்கள் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.மெட்ரிக் இயக்குனரகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல முறைகேடுகள் நடந்தேறின. விதிகளை மீறியோருக்கும் அங்கீகாரம் அளித்தனர். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நடிகர் ரஜினியின், 'ஆஷ்ரம்' பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில், அந்த பள்ளியின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கைஎடுத்தது? மொத்தத்தில், ஐந்து ஆண்டு கால ஆட்சியில் கல்வித்துறை, கையூட்டு துறையாக மாறியதால், நுாற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் காணாமல் போய் விட்டன. இதே நிலை இனியும் தொடர்ந்தால், கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
க.மீனாட்சி சுந்தரம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்ற பொதுச்செயலர்

ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ள வசதி

ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

             ரயில் பெட்டிகளில் இருக்கை ஒதுக்கீட்டில் ஆண் பயணிகள் மத்தியில் பெண் பயணி ஒருவர் மட்டும் தனியாக பயணம் செய்யும்போது, பாதுகாப்பற்ற சூழலை அவர் உணரவேண்டிய நிலை ஏற்படும். இதை நிவர்த்திச் செய்யும் பொருட்டு பெண் பயணிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த தெற்கு ரயில்வே சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, ரயில்களில் தனியாகச் செல்லும் பெண் பயணிகளின் உதவிக்காக பிரத்யேகமாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்களில் தனியாக செல்லும் பெண் பயணிகள், உதவி தேவைப்பட்டால் உதவி வணிக மேலாளர் அமுதா என்ற அதிகாரியை 9003160980 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 சம்பந்தப்பட்ட பெண் பயணிகளின் குறைபாடுகளைக் களைந்து, அவருடைய இருக்கை மற்றும் படுக்கையை வேறு இடத்திற்கு மாற்றி சுமுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 புகார் தெரிவிப்பதற்கு உரிய சூழல் மற்றும் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர் தன்னுடைய பெயர் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும். பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர பெண் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளுக்கு பிரத்யேக உதவி எண் 182 வசதி உள்ளது. இதனை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை | Original Education Website: தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7...

ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்



ஏப்ரல் 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் அட்டையை எளிதாக பெற 363
மையங்களில் சிறப்பு ஏற்பாடு; ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை
வீட்டுக்கே அனுப்பப்படும்









       ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


தேர்தலில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம்
வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் இலக்கு.
வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க
வாய்ப்பு அளிக்கப்படுகிறது.



தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும்
விண்ணப்பம் செய்யலாம். ‘ஆண்டிராய்டு’ செல்போன் மூலம் tnelectionplaystore
என்ற ‘ஆப்’பை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


363 அலுவலகங்கள்


புதிய முயற்சியாக எளிய முறையில் வாக்காளர்
அட்டை பெற வாக்காளர் சேவை மையம் என்ற மையத்தை வரும் 14–ந் தேதியில்
(திங்கட்கிழமை) இருந்து தொடங்க இருக்கிறோம்.


இந்த மையம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள
தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), கலெக்டர்
அலுவலகம் ஆகிய 363 இடங்களில் தனி அறையில் செயல்படும்.


ஸ்பீட் போஸ்ட்டில் அட்டை


ஒவ்வொரு மையத்திலும் இரண்டு அலுவலர்கள்
இருப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல்,
திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்,
பழைய அட்டையை மாற்றுதல் போன்ற தேவைகளுக்கு இந்த மையத்தை
பயன்படுத்திக்கொள்ளலாம்.


வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவேண்டும்
என்றால் அந்த நபரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ வரவேண்டும். புதிதாக
அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கிறவர்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும்.
அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணம் செலுத்தவேண்டும்.


ஆன்லைனில் அட்டைக்காக விண்ணப்பித்து அதை
வாக்காளர்கள் பெறுவதற்கு புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் ரூ.25–ம், அதோடு
சேர்த்து ரூ.40–ம் செலுத்த வேண்டும். ரூ.65 செலுத்தியவர்களுக்கு ஸ்பீட்
போஸ்ட் மூலம் அந்த அட்டை அவர்களின் முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 9 March 2016

பாடசாலை | Original Education Website: சூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் ? என்ன பரிகாரம் ?

 

சூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் ? என்ன பரிகாரம் ?


08/03/2016


நாளைமார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும்
தெரியும்.

 
உள்ளங்கைக்குள் சாக்லெட்டை மறைத்துவைத்து தன் குழந்தைக்கு ஆர்வமூட்டி அதனை
மெல்லத் திறந்து காட்டும் ஒரு தகப்பனைப்போல மனிதனுக்கு மெல்ல மெல்ல தனது
ரகசியங்களைத் அறியத் தந்து கொண்டிருக்கும் இந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு
குழந்தையின் ஜனனம் முதற்கொண்டு பூமியின் மூலமுதல்வனான சூரியனின் ஒளியை
சின்னஞ்சிறு நிலவு கிரகணம் என்ற பெயரில் மறைப்பது வரை நடக்கும்
அனைத்திற்கும் காரணங்களும் தொடர்புகளும் கண்டிப்பாக இருக்கின்றன.
 
“கிரஹண்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு ஒளி மறைப்பு அல்லது ஒளி இழப்பு என்று அர்த்தம்சூரியனும் பூமியும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும்அமாவாசை நாளில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரியஒளியை நிலவு மறைப்பதால் சில நிமிடங்களுக்கு வானில் சூரியன் மறையும்தோற்றமான இத்தகைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.இத்தனை சிறிய நிலாவின் நிழல் அதனை விட நானூறு மடங்கு பெரியதான சூரியனையேமறைப்பது போன்ற இந்தத் தோற்றத்திற்குக் காரணம் பூமிக்கும் சந்திரனுக்கும்இருக்கும் தூரத்தைப் போல நானூறு மடங்கு தூரத்தில் சூரியன்  இருப்பதுவேயாகும்.எனவே அருகில் இருக்கும் சிறிய நிலாவும் தூரத்தில் இருக்கும் பெரியசூரியனும் நமது கண்களுக்கு ஒரே அளவில் இருப்பது போன்ற தோற்றம் உண்டாகி இந்தகனகச்சிதமான ஒளி மறைப்பு உண்டாகிறது.



வானில் அனைத்துச் சிறிய பொருட்களும் தனக்கு அருகில் இருக்கும் பெரிய பொருளைச் சார்ந்து அதனை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. அதன்படி சந்திரன் பூமியை ஏறத்தாழ ஒருமாதத்திற்கு ஒருமுறை சுற்றும் நிலையில் நமது பூமிவருடத்திற்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.நமது சூரியன் தனது சூரிய மண்டலத்திலுள்ள நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள்,அவற்றின் துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள், கிரகங்களாக உருப்பெறாதஆஸ்ட்ராய்டு குறுங்கற்கள், ஊர்ட் மேகங்கள் போன்ற அனைத்தையும் இழுத்துக்கொண்டு நொடிக்கு சுமார் 275 கிலோமீட்டர் தன்னை விடப் பெரிதான இந்த பால்வெளிமண்டலத்தை ஏறத்தாழ இருபத்தியிரண்டு கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.

இதனையே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்கிறோம்.மனிதன் அறிவியல் முன்னேற்றத்தை அடைய ஒருவகையில் இந்த பௌர்ணமி அமாவாசைமற்றும் சூரிய சந்திர கிரகணங்களே காரணமாக இருந்தன. மனிதனின் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மற்றும் ஆய்வு மனப்பான்மையை இந்த நிகழ்வுகளே தூண்டிவிட்டன.பூமியிலும் ஏனைய வான்பொருட்களிலும் பிரபஞ்சத்திலும் நடக்கும் அனைத்துசம்பவங்களும் ஒன்றுக்கொன்று கண்டிப்பாகத் தொடர்புடையவையே. காரணங்கள்  இல்லாமல் காரியங்கள் இல்லை.இதனையே நமது ஞானிகள் சுருக்கமாக அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது என்று சொன்னார்கள்.ஜோதிடத்தில் சூரியன் ஆத்மா எனப்படும் ஆன்மக்காரகனாக குறிப்பிடப்படுகிறான்.சந்திரனை மனதை இயக்குபவன் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்று அழைக்கிறோம்.நாம் பிறக்கக் காரணமான இந்த பூமி லக்னம் எனப்படும் நமது உயிரை நமக்குத்தந்தது.ஆகவே நமது உயிரும் மனதும் ஆன்மாவும் ஒரு நேர்கோட்டில் இணையும் நாளான இந்தக்கிரகண நாள் ஆன்மீகத்தில் ஒருவகையில் தனிச் சிறப்பான நாளாகச்சொல்லப்படுகிறது. உலகின் உன்னதமான மேலான எனது மதம் உயிர் மனம் ஆத்மா என இவை மூன்றும் ஒரேஅலைவரிசையில் இருக்கும் இந்த கிரகண நேரம் சித்துக்கள் கை வரப்பெற வேண்டும்,

இறைநிலை பற்றிய ரகசியத்தை அறிய வேண்டும், பரம்பொருளின் பக்கத்தில் செல்ல
வேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு தவம் தியானம் போன்றவைகளைச் செய்ய
சரியான நேரம் என்று சுட்டிக் காட்டுகிறது.
இந்த கிரகணநேரத்தில் உங்கள் மனமும் உங்களின் உயிர் அடங்கிய இந்த உடலும்ஆன்மா எனப்படும் பிரபஞ்ச உயர்சக்தியோடு ஒரேவித அலைவரிசையில் தொடர்புகொண்டிருக்கும் என்பதால்தான் இந்த கிரகண நேரங்களில் நமது ஞானிகள் சாதாரணவிஷயங்களைச் செய்யாமல் நமது மனது பக்குவப்படும் ஜபம் தியானம் போன்ற உன்னதவிஷயங்களைச் செய்யச்சொன்னார்கள்.
கிரகணநேரத்தில் வெளியே வராதே என்று நமது மதம் சொல்வது பகுத்தறிவாளர்கள்என்று சொல்லிக் கொள்பவர்களால் கிண்டல் செய்யப்படுகிறது. ஆனால் பூகம்பம்சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே உணரும் சக்தி படைத்தவிலங்குகளும் பறவைகளும் கிரகண நேரத்தில் வெளியே வருவதில்லை அல்லது உடனடியாகஇருப்பிடம் திரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 பொதுவாக ஒரு கிரகணத்தின் போது கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோண பத்தாவதுநட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் தோஷம்அடையும் என்பது ஜோதிடவிதி.

தற்போது நடைபெற இருக்கும் இந்த சூரிய கிரகணம் கும்பராசியில் பூரட்டாதிநட்சத்திரத்தில் நடைபெறுவதால் பூரட்டாதியின் முன்பின் நட்சத்திரங்களானசதயம் உத்திராட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சூரியன் சம்பந்தப்பட்டவிஷயங்களில் தோஷங்கள் ஏற்படும்.

மேலும் பூரட்டாதி குருவின் நட்சத்திரம் என்பதால் குருபகவானின் மற்ற இருநட்சத்திரக்காரர்களான புனர்பூசம் விசாகம் ஆகிய நட்சத்திரத்தில்பிறந்தவர்களும் அவர்களது ஜாதகப்படி சூரியனின் ஆதிபத்திய காரகத்துவஅமைப்புகளில் பாதிப்புகளை அடைவார்கள்.இதனால் கிரகணம் நிகழும் ராசியான கும்பம் மற்றும் அதன் முன்பின் ராசிகளான மகரம் மீனம் மற்றும் மிதுனம் கடகம் துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்குள்அடங்கிய மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் தந்தைக்கோ, தந்தைவழி உறவினர்கள், அல்லது

பூர்வீகஅமைப்புகளில் கெடுபலன்களோ அல்லது மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின்
ஜாதகங்களில் சூரியன் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அந்த பாவபலன்களில்
குறைகளும் கெடுபலன்களும் இருக்கும்.

சூரியன் ராகுகேதுக்களால் பீடிக்கப்படுவதால் மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள்
கிரகண தினத்தன்று தங்களின் தாய் தந்தைக்கு அல்லது அவர்களுக்கு நிகரான
பெரியோர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை,எளியோருக்கு தங்களால் இயன்ற அளவுக்கு
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளை தானம் செய்வது கெடுபலன்களில் இருந்து
தற்காத்துக் கொள்ளும் சிறந்த
பரிகாரம்.


ஜோதி வடிவான சூரிய சந்திரர்களையே சிவன்-சக்தி அம்மை அப்பன் என வழிபடும்
நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் இவர்கள்
வலுவிழப்பதால்தான் நடைசாத்தப்பட்டு கிரகணம் முடிந்த பின் பரிகாரபூஜைகள்
செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.

கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை அன்று வெளிப்படும் தோஷமான கதிர்களைத்
தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு என்பதை நம் முன்னோர்கள்
கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ அருந்தக் கூடாது எனவும்
அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப்
புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது சூரிய கிரகணம்
ஆரம்பிக்கும் நேரமும் சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது
என்பதால் இந்த நேரங்களில்
புனித நீராடுவது நல்லது.

ஒரு பொதுவான வழிகாட்டுதலாக நாளைய கிரகண நேரத்தில் கும்ப லக்னம் மற்றும்
கும்பராசி மற்றும் ஜாதகத்தில் சூரியனைச் சுபராகக் கொண்டவர்கள் முக்கிய
செய்கைகள் முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருப்பது நலம். அதைவிட இந்த
நேரத்தில் சூரிய காயத்ரி போன்ற சூரிய துதிகளை தியானிப்பது நல்லது.

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்?

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. நீரில் விழும் சூரிய
பிம்பத்தைப் பார்க்கலாம். கூலிங்கிளாஸ் போன்ற குளிர்கண்ணாடி அணிந்து
பார்ப்பதையும் தவிர்க்கவும். இதனால் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

வீட்டில் இருக்கும் உணவு நீர், போன்ற பொருட்களில் தர்ப்பைப் புல்லை இட்டு
வைக்க நமது முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும்
கிரகணம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிப்பது மேன்மை.

சர்க்கரை நோயாளிகள் போன்று நேராநேரத்திற்கு உணவருந்த வேண்டியவர்கள்
கிரகணநேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே சாப்பிட்டு விடலாம். மற்றவர்கள்
கிரகணம் முடிந்த பிறகு மட்டுமே சாப்பிடுவது நல்லது.

நடைபெறப்போவது சூரிய கிரகணம் என்பதால் கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் பித்ரு
தர்ப்பணம் கொடுக்கலாம். இளைய தலைமுறையினர் கிரகணநேரத்தில் பேஸ்புக் வாட்ஸ்
அப் போன்ற பொழுது போக்குகளில் அரட்டை அடிக்காமல் ஜபம் மற்றும் பாராயணம்
செய்வது அவர்களின் மனோபலம் செயல்திறனைக் கூட்டும்.









NHIS Deduction Under 80 D Income Tax Rules ( not under 80 C)

தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் புதிய சுகாதார காப்பீட்டு திட்ட தொகையை (NHIS Deduction Rs. 150/- per month) வருமான வரி கணக்கின் போது 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கமாக 80C யில் பழைய சுகாதார திட்ட தொகை வரி சலுகை பெறப்பட்டு வந்தது. 
தற்போதைய சுகாதார காப்பீட்டு திட்டம், பங்களிப்பு காப்பீட்டு திட்டமாக அறிவிக்கப்பட்டதால் ரூ. 1800/- ஐ 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம்.

RTI Clarification- CPSல் ஊழியர் கட்டும் தொகையில் 50000ரூபாய் மட்டும் 80CCD(1B) என்ற புதிய பிரிவில் தனியாக கழித்துக்கொள்ளலாம். Savings 150000க்கு மிகும் பச்சத்தில் இதனை அடுத்தவருடமாவது பயன்படுத்திக்கொள்க.

Monday, 7 March 2016

கே.வி., பள்ளி 'அட்மிஷன்' யாருக்கு முன்னுரிமை

'மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், முதலில், மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி., பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. மார்ச் 10ல் விண்ணப்பங்கள் பெறுவது நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் யாருக்கு முன்னுரிமை என கே.வி., பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

* மத்திய அரசு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் குழந்தை, அயல் நாட்டு பணியிலுள்ளோர் குடும்பத்தினருக்கு முன்னுரிமை தரப்படும்.
* மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத் துறைநிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவன அதிகாரிகள், பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
* அதன் பின், மாநில அரசு பணியாளர் குழந்தைகளுக்கும், அதில் இடங்கள் மீதம் இருந்து காத்திருப்பு பட்டியலில் யாரும் இல்லை என்றால் அரசு பணியாளர் இல்லாதவர்களின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான குழந்தைகளுக்கு இடம் வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஆசிரியர்கள் துாங்கி வழிவதை தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பல மணிநேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர்ராஜ்குமார் கூறியதாவது:பொதுத் தேர்வு, காலை, 9:45 மணிக்கு துவங்கினாலும், ஆசிரியர்கள் அதற்கான நடைமுறைகளுக்காக, காலை, 8:30 மணிக்கு, முதன்மை கண்காணிப்பாளர் அறைக்கு வர வேண்டும். அதனால், வீட்டிலிருந்து காலை, 6:30 மணிக்கே புறப்பட்டு வர வேண்டும்.தேர்வு முடிந்து விடைத்தாள்களை சோதனையிட்டு, முதன்மை கண்காணிப்பாளரிடம் அவற்றை பட்டியலிட்டு ஒப்படைத்து முடித்து, பிற்பகல், 3:00 மணிக்கு தான் வீட்டுக்கு புறப்பட முடியும்; இதனால், 4:30 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில், தேர்வு அறையில் கூட நாற்காலி இல்லாமல் தொடர்ந்து நின்று கொண்டே இருப்பதால், ஆசிரியர்கள், 10 மணி நேரம் வரை தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளான ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேர்வறையில், 'டீ, காபி' கூட வழங்கப்படுவதில்லை. இது மனித உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தேர்வு அறையில் நாற்காலி போடவும், டீ, காபி வழங்கவும் தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, 6 March 2016

8 pg degrees and 2 doctorate degrees got by Girija in 44 years










சர்வதேச கால்பந்து போட்டி தேர்வு:ராமநாதபுரம் மாணவர் சாதனை

06/03/2016
சர்வதேச கால்பந்து போட்டி வீரர்களுக்கான தேர்வில் ராமநாதபுரம் மாணவர் 4ம் கட்ட தேர்வுக்கு முன்னேறினார்.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்து போட்டி 'பிபா' சார்பில் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்கு தகுதியான வீரர்களை இந்திய விளையாட்டு ஆணையம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்கிறது.
         பிப்., 14, 20, 21ல் சிவகங்கையில் நடந்த முதல், இரண்டாம் கட்ட தேர்வுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் சேது பூபதி, சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் தாஜூதீன் தேர்ச்சி அடைந்தனர்.திருச்சியில் கடந்த வாரம் நடந்த 3ம் கட்ட தேர்வில் இருவரும் கலந்து கொண்டனர். இதில் சேது பூபதி தேர்ச்சி பெற்று 4ம் கட்ட தேர்வுக்கு முன்னேறினார்.சேது பூபதி கூறுகையில்,'ஆறாம் வகுப்பில் இருந்து கால் பந்து விளையாடி வருகிறேன். 2014ல் சென்னையில் நடந்த 14 வயதிற்குட்பட்டோர் கால்பந்து முகாமில் பங்கேற்றேன். சர்வதேச போட்டிக்கு 4 ம் கட்ட தகுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்

பாடசாலை | Original Education Website: அன்பாசிரியர் - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்...

அன்பாசிரியர் - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்!

06/03/2016
ஆசிரியர்அதிகாரிகளுக்காக வேலை செய்கிறார்; நல்ல ஆசிரியர் மாணவர்களுக்காக வேலைபார்க்கிறார்; சிறந்த ஆசிரியரோ, அவர்களின் பெற்றோர்களுக்காக பணிபுரிகிறார்.
       இரண்டு முறை சிகரம் தொட்ட ஆசிரியர் விருது,
2012-ல் விக்கிப்பீடியாவின் தொடர் பங்களிப்பாளர் விருது, இணையத்தில்தமிழைப் பரப்பியதற்காக, இணையத்தில் தமிழ் வளர்த்த ஆசிரியர் விருது உள்ளிட்டபுகழுக்கு சொந்தக்காரர்; தன்னம்பிக்கை பேச்சாளர்; கட்டுரையாளர்;குடும்பத்தலைவி என்று பல்வேறு தளங்களில் சுற்றிச் சுழல்கிறார் அன்பாசிரியர்பார்வதி ஸ்ரீ.
''ஆசிரியப்பணியில் சேர்ந்து 20 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும்அதிக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை கூடிக்கொண்டே செல்கிறது. இப்போது நான்வேலை பார்க்கும் சேலம் கந்தம்பட்டி பள்ளி, அப்போது திறந்தவெளியில்இயங்கிக் கொண்டிருந்தது.ஐந்து வகுப்புகள் ஓட்டிலும், ஒன்று டார்ஸ்கட்டடத்திலும் இயங்க, மற்ற வகுப்புகள் திறந்தவெளியில் இயங்கின. பக்கத்தில்இருந்த கோவில் சாவடியிலும், மரத்தடியிலும் மாணவர்களை அமர்த்தி, பாடம்சொல்லிக் கொடுத்தோம். நாட்கள் ஓடின. மாநகராட்சி மற்றும் எம்.எல்.ஏ. நிதிமூலம் கட்டிட உதவி பெற்றோம். வெள்ளிப்பட்டறையில் வேலை செய்பவர்கள்,ஜவ்வரிசி மில்லில் இருக்கும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள்தான் இங்கே
படிக்கிறார்கள்.மற்ற பள்ளிகளைப் பார்க்கும்போதெல்லாம் மின்விசிறி, மேசை,நாற்காலி உள்ளிட்ட வசதிகள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் பிறக்கும். ஒருமுறை பதிப்பகம் ஒன்றுக்கு உரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளியைமுடித்துவிட்டு வீட்டுக்குப் போய் தினமும் உரை எழுதுவேன். அதில் கிடைத்தசன்மானத்தை வைத்து பள்ளிக்கு அலமாரியும், இரண்டு மின்விசிறிகளையும்வாங்கினோம். ஊர்மக்கள், மின்விளக்கு, பீரோக்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தனர்.ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மோட்டார் ஒன்றைவாங்கிக்கொடுத்தார்.
கற்பித்தலில் தனித்திறன்
செயல்வழிக்கற்றல் செயல்பாட்டுக்கு வரும் முன்னரே, அன்பாசிரியர் பார்வதி
ஸ்ரீ, கற்றல் அட்டைகள் தயாரித்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
கற்றலில் இனிமை சேர்க்கும் விதமாக, செய்யுள்களுக்கு இசையமைத்து பாட்டுப்பாடி பாடம் கற்பிக்கிறார். சுமார் ஐந்து வருடங்களாக தொடர்ந்து அறிவியல்கண்காட்சியை நடத்தி வருகிறார்.மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும், மேலாண்மைப் பண்பையும் வளர்க்கும் விதமாக குறிப்பிட்டபண்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நிதியமைச்சர்,சுகாதாரத்துறைஅமைச்சர் உள்ளிட்ட பதவிகள் அளிக்கப்படுகின்றன. துறுதுறுப்பாக இருக்கும்குழந்தைகளுக்கு ஸ்மைலி பேட்ச் ஒட்டப்படுகிறது. படிப்பு,செயல்பாடு மற்றும்ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு நட்சத்திரப்பரிசு உண்டு. ஒவ்வொருபத்து நட்சத்திரத்துக்கும் ஒரு பரிசு. பரிசுகளைத் தன் பெட்டியில் எப்போதும்
கையோடு வைத்திருக்கிறார். அதில் மொழி அகராதி, பாட்டில், பேனா, நோட்டுகள்ஆகியவை நிறைந்திருக்கின்றன.என்னுடைய ஓய்வு நேரங்களில், பெரும்பாலும்இணையத்தில்தான் இருப்பேன். வகுப்பை எப்படி டிஜிட்டல் வகுப்பறையாக மாற்றலாம்என்று திட்டமிடுவது வழக்கம். கற்றல் அணுகுமுறைகளில் வித்தியாசம் இருக்கவேண்டும். இதனால்பொம்மலாட்டம், பாடல், வில்லுப்பாட்டு உள்ளிட்டவைகளைக்
கொண்டு பாடம் நடத்துகிறேன். யோகா தெரியும் என்பதால், பிள்ளைகளுக்கு யோகாசொல்லிக் கொடுக்கிறேன். மாணவர்களிடையே தொழில்நுட்பம் வளர்க்க தினமும் கடைசிவகுப்பு கணிப்பொறி சார்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.பள்ளியில்இணைய வசதி இல்லாததால், மாணவர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், இங்கிருந்தே எழுதுகிறார்கள். இதுவரைவிக்கிபீடியாவில் என்னுடைய மாணவர்கள், 15 கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்கள் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள்.



விக்கிபீடியா பயணம்
உலகம் முழுக்க 285 மொழிகளில் விக்கிபீடியா பரந்து விரிந்திருக்கிறது.
விக்கிபீடியாவின் வளர்ச்சி குறித்து நடத்தப்படும் மாநாட்டுக்கு சுமார் 2500
பேர் உலகம் முழுக்க இருந்து அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில் இருந்து
11 பேரும், தமிழ்நாட்டில் இருந்து இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த
இருவரில் அன்பாசிரியர் பார்வதி ஸ்ரீயும் ஒருவர். அப்படி என்ன செய்தார்
அவர்?தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மின்மயமாக்கல் குறித்துப் பேசும்
வாய்ப்பு கிடைத்தது. அதில், பள்ளிகளில் விக்கிபீடியாவைப் பயன்படுத்துவது
குறித்துப் பேசினேன். தகவல் மற்றும் தொலைதொடர்புக்கான ஐ.சி.டி. மூலம்,
கிட்டத்தட்ட 20 மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம்,சுமார் 1600 ஆசிரியர்கள் விக்கிபீடியாவில் இணைந்தார்கள். அதன்வழியாகதமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. விழாவுக்கு முன்னர் 1400 ஆகஇருந்த கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. 400க்கும் அதிகமானகட்டுரைகள் புதிதாக எழுதப்பட்டு இணைக்கப்பட்டன.2010 முதல் விக்கிபீடியாவில்கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதுவரை அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை
சுமார் 600. அதனைப் பாராட்டி, விக்கிமீடியாவின் உதவித் தொகை
கிடைத்திருக்கிறது. அத்தோடு 13 நாட்கள் ஹாங்காங்கை சுற்றிப்பார்க்கவும்,
விக்கிமேனியா மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது.இதுகுறித்துப் பேசிய அன்பாசிரியர் பார்வதி
ஸ்ரீ,"விக்கிபீடியா மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்ந்து பள்ளிக்கு
உதவுகிறார்கள். இதனால் பள்ளித் தேவைகளுக்கான பணத்தட்டுப்பாடு ஓரளவுநீங்கியுள்ளது. கலிஃபோர்னியா ஐக்கிய நாடுகள் தமிழர் சங்கம், எய்ம்ஸ்இந்தியா (AIMS- Activity in Mother Land) என்ற திட்டத்தின் கீழ் எங்களுக்கு
2500 டாலர்களை வழங்கியுள்ளனர். இதைக் கொண்டு பள்ளியைச் சுற்றிலும்
கிரில்கேட் போட்டிருக்கிறோம். ஒரு நண்பர், சுவர்களுக்கு வண்ணமடித்து,
குழந்தை நேய வகுப்பறைகளை உருவாக்கவும், புத்தகங்கள் மற்றும் தமிழ்
அகராதிகளை வாங்கவும் உதவி செய்தார். ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்குகணினியும் கற்றுத் தருகிறார்.
பலம்
மாணவர்களின் நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே என்னுடைய உந்துதலாகஇருக்கிறது. சோர்ந்து போகும்போதெல்லாம், 'நடப்பது எல்லாம்
நல்லதுக்குத்தான்' என்று தேற்றிக் கொள்வேன். ஓர் ஆசிரியராக என்னை உணராமல்,ஒரு தாயாகவே உணர்வதையே பெரிய பலமாக நினைக்கிறேன்.எதிர்காலதிட்டங்கள்பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீர் வசதியைக் கொண்டு வரவேண்டும். வகுப்புகளை தொடுதிரையாக மாற்ற வேண்டும். மாணவர்களுக்கானசெயல்வழிக்கற்றலை புதுமைப்படுத்த வேண்டும். எங்களின் கிராமப்பள்ளியைஉலகளாவிய தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
மனதை வருத்திய சம்பவங்கள்
அதெல்லாம் நிறைய இருக்கிறது. முக்கியமாக பள்ளிக்கு நிதிகேட்கப் போகும்போது.அந்த நேரங்களில் நிறைய அவமானப்பட்டிருக்கிறோம். 25,000 ரூபாய் தேவைக்குஅவர்களை அணுகினால், நிறைய பேசிவிட்டு 250 ரூபாய் கொடுப்பார்கள். சுவரில்அடித்த பந்து போலத் திரும்பி வந்திருக்கிறோம். சில இடங்களில்பிச்சைக்காரர்களைப் போல விரட்டப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் கண்டு ஒருநாளும் சோர்ந்ததில்லை; வெட்கப்பட்டதில்லை. 'என் ஏழைக்குழந்தைகளுக்காகத்தானே கேட்கிறேன்' என்று நினைத்துக் கொள்வேன்.நம்பி வரும்குழந்தைகளை, நாம்தான் நல்லபடியாக உருவாக்க வேண்டும். மாணவர்களின்உருவாக்கத்தில் பங்கு கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு விதையாகஇருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்'' என்கிறார்.க.சே. ரமணி பிரபா தேவி -
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

TRB TNPSC: TET Exam Relaxation not allowed to teachers - RTI ...

TET Exam Relaxation not allowed to teachers - RTI Letter






 

Saturday, 5 March 2016

TNPSC VAO 2016 Official Key Answers Published Now.

05/03/2016

TNPSC VAO 2016 Official Key Answers Published Now.

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE FOR THE YEAR 2014-2015
(Date of Examination:28.2.2016 FN)
       1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th March 2016 will receive no attention.

G.O.(Rt).No.142 Dt: February 26, 2016 New Health Insurance Scheme– Notified - Orders issued.

05/03/2016




G.O.(Rt).No.142 Dt: February 26, 2016 New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified - Orders issued.

ராமநாதபுரம் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சம்பளம் போச்சு!!!

05/03/2016

         ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியம் கிடைத்துள்ளது.


புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிப்., 10 முதல் பிப்., 19 வரை நடந்தது.சட்டசபையில் 110 விதியில் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை. ஆனால் ராமநாதபுரம் கலெக்டர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரிடம் ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அரசு ஊழியர்களின் 10 நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டன.

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி கூறியதாவது: வேலை நிறுத்த காலத்தையும் பணிக்காலமாக மாற்றப்படும் என, அரசு உறுதி அளித்தது. இதற்கான உத்தரவு வருவதற்கு முன்பே, ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவால் அரசு ஊதியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் கிடைக்கவில்லை. அரசு உத்தரவு வந்துவிடும் என, எதிர்பார்த்தோம். அதற்குள் தேர்தல் தேதி அறிவிப்பட்டது. இதனால் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், என்றார்.

பாடசாலை | Original Education Website: 14 ஆண்டுகளாக தவறாது பள்ளிக்கு வரும் மாணவி



14 ஆண்டுகளாக தவறாது பள்ளிக்கு வரும் மாணவ

05/03/2016
        பள்ளியில்சேர்ந்த நாள் முதல், பள்ளி இறுதி ஆண்டு வரை, ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், 100 சதவீத வருகை தந்து சாதனை மாணவிக்கு பாராட்டுகள்
குவிகின்றன. 
        மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா நகரின் டம் டம் பகுதியில்
வசிக்கும், சித்தரஞ்சன் குஹா - டாலி தம்பதியின் மகள் சந்திரஜா.
அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்ந்த
சந்திரஜா, தற்போது, பிளஸ் ௨ படித்து வருகிறார்.
படிப்பில்மட்டுமின்றி, வருகை பதிவிலும், 'ஏ' கிரேடு பெற்றுள்ளார். பள்ளியில்
சேர்ந்த நாள் முதல், இன்று வரை, அவர் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை.
100 சதவீத வருகை பதிவுடன் அவர் சாதனை படைத்துள்ளதை, பள்ளி முதல்வர் மற்றும்ஆசிரியர்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் பாராட்டி உள்ளனர். சந்திரஜாவைபார்த்து, மற்ற மாணவர்களும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதாக, பள்ளிமுதல்வர் கூறியுள்ளார். மாணவியின் சாதனை குறித்த தகவல், பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, மேற்குவங்க மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, சந்திரஜாவை தன் அமைச்சக அலுவலகத்திற்கு வரவழைத்து, சான்றிதழ் மற்றும் பரிசுவழங்கி பாராட்டினார். மேலும், சந்திரஜாவுக்கு தேவையான உதவிகளை, அரசு செய்யும் என்றும் உறுதியளித்தார்.